search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப சலனம்"

    வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #Rain
    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில், கத்திரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கடும் வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி வருகின்றனர்.

    இந்தநிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    வீசும் அனல் காற்றின் வேகம் உயர வாய்ப்பு இல்லை. அடுத்த 48 மணி நேரம் (இன்றும், நாளையும்) இதே போக்கு தொடரும்.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும். மாலை நேரத்தில் ஆங்காங்கே குளிர்ந்த காற்று வீசலாம்.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

    விழுப்புரம் மாவட்டம் மணப்பூண்டியில் 7 செ.மீ. மழை பெய்திருக்கிறது. மதுரை மாவட்டம் தல்லாகுளம், கரூர் மாவட்டம் மாயனூரில் தலா 6 செ.மீ. மழையும், காஞ்சீபுரத்தில் 5 செ.மீ. மழையும், தர்மபுரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #Rain
    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 18-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். #Rain
    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயில் கோரதாண்டவம் ஆடுவதால் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்குகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.

    கோடை மழை அடுத்த சில நாட்களும் தொடரும் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:-



    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 18-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. படிப்படியாக மழை பெய்ய ஆரம்பித்து 18-ந் தேதியில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். சென்னையில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    சென்னையில் நாளை (இன்று) லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மிதமான மழையை எதிர்பார்க்கலாம். வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. அந்த புயல் ஒடிசா, வங்காளதேசம் இடையே கரையை கடக்க கூடும். இந்த புயல் ஆரம்ப நாட்களில் தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rain
    அந்தமான் மற்றும் வங்கக் கடலில் வரும் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRains #LowPressureArea #IMD
    புதுடெல்லி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

    இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு வருமாறு:-

    நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. 

    அக்டோபர் 23ம் தேதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்யும்.  மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNRains #LowPressureArea #IMD
    ×